கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஜொமாட்டோ நிறுவனத்தில் பணியாற்றிய இணை நிறுவனர் அக்ரிதி சோப்ரா, செப்டம்பர் 27, 2024 அன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு நிதி மற்றும் செயல்பாடுகளின் மூத்த மேலாளராக தனது பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் நிதித் துணைத் தலைவர், நிதி அதிகாரி மற்றும் இறுதியாக 2021 ஜூன் மாதம் தலைமை மனிதவள அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். மேலும், ஜொமாட்டோவில் இணைவதற்கு முன், 3 ஆண்டுகள் PwC நிறுவனத்தில் வரி மற்றும் ஒழுங்குமுறை துறையில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது நீண்ட கால பணிக்குப் பிறகு, புதிய சவால்களை எதிர்கொள்ள விரும்புவதாகக் கூறி அக்ரிதி சோப்ரா நிறுவனத்தை விட்டு விலகியுள்ளார். தனது தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயலுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஜொமாட்டோவில் பணியாற்றிய அனுபவம் மிகவும் வளமானதாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.