ஜொமாட்டோ பங்குகள் 3% சரிவு - 3112 கோடி ரூபாய் பங்கு விற்பனை எதிரொலி

March 6, 2024

இன்றைய வர்த்தக நாளில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 3% அளவுக்கு சரிவடைந்தது. இதற்கான முக்கிய காரணமாக அண்மையில் நிகழ்ந்த பங்கு விற்பனை கூறப்படுகிறது. பிளாக் டீல் வர்த்தகம் மூலம் 19 கோடி ஜொமாட்டோ பங்குகள் விற்கப்பட்டுள்ளது. இது ஜொமாட்டோ நிறுவனத்தின் மொத்த பங்கு பங்களிப்பில் 2.1% ஆகும். இதன் மதிப்பு 3112 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, ஜொமாட்டோ பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்றைய காலை நேர நிலவரப்படி, தேசிய […]

இன்றைய வர்த்தக நாளில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 3% அளவுக்கு சரிவடைந்தது. இதற்கான முக்கிய காரணமாக அண்மையில் நிகழ்ந்த பங்கு விற்பனை கூறப்படுகிறது.

பிளாக் டீல் வர்த்தகம் மூலம் 19 கோடி ஜொமாட்டோ பங்குகள் விற்கப்பட்டுள்ளது. இது ஜொமாட்டோ நிறுவனத்தின் மொத்த பங்கு பங்களிப்பில் 2.1% ஆகும். இதன் மதிப்பு 3112 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, ஜொமாட்டோ பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்றைய காலை நேர நிலவரப்படி, தேசிய பங்குச் சந்தையில், ஜொமாட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 160 ரூபாய் அளவில் இருந்தது. மேலும், கடந்த மார்ச் 4-ம் தேதி வரலாற்று உச்ச பங்கு மதிப்பை ஜொமேட்டோ எட்டி இருந்தது. கடந்த 3 மாதங்களில் ஜொமாட்டோ பங்குகள் தொடர் உயர்வை பதிவு செய்து வந்தன. கிட்டத்தட்ட 42% அளவுக்கு உயர்வு பதிவாகியிருந்தது. சந்தை மதிப்பு 1.46 லட்சமாக உயர்ந்தது. இந்த நிலையில், பங்கு விற்பனை காரணமாக சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu