ஜொமாட்டோவின் பங்குகள் 10% உயர்ந்து ரூ. 262.20 என்ற புதிய உயர்வை எட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ஜொமாட்டோவின் வருவாய் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. குறிப்பாக, உணவு விநியோகம் மற்றும் பிளிங்கிட் சேவைகளில் 20% க்கும் அதிகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், 2024 ல் இரட்டிப்பு மடங்காக ஜொமாட்டோ பங்குகள் உயர்ந்துள்ளன. பல்வேறு சந்தை மதிப்பாய்வு நிறுவனங்கள், ஜொமாட்டோவின் பங்கு மதிப்பீட்டை உயர்த்தியுள்ளன. CLSA ரூ.350, நோமுரா ரூ.280, MOFSL மற்றும் நுவாமா ரூ.300 என்ற அளவில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயரும் என்று கணித்துள்ளன. இது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.