பாகிஸ்தான் இடைத்தேர்தலில், இம்ரான் கான் கட்சி, பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது

October 18, 2022

பாகிஸ்தானில், அண்மையில் 8 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், ஏழு தொகுதிகளில் இம்ரான் கானின் Pakistan Tehreek-e-Insaf (PTI) கட்சி போட்டியிட்டது. அதில் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மீதமுள்ள இரண்டு இடங்களை ஆளும் அரசின் கூட்டணி கட்சியான பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்ட்டி வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் மக்களின் மனதில் இம்ரான் கான் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், நாடு தழுவிய முறையில் அவர் ஊர்வலம் நடத்தியது மாநாடு நடத்தியது போன்றவை […]

பாகிஸ்தானில், அண்மையில் 8 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், ஏழு தொகுதிகளில் இம்ரான் கானின் Pakistan Tehreek-e-Insaf (PTI) கட்சி போட்டியிட்டது. அதில் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மீதமுள்ள இரண்டு இடங்களை ஆளும் அரசின் கூட்டணி கட்சியான பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்ட்டி வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் மக்களின் மனதில் இம்ரான் கான் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், நாடு தழுவிய முறையில் அவர் ஊர்வலம் நடத்தியது மாநாடு நடத்தியது போன்றவை இந்த வாக்கெடுப்பில் எதிரொலித்தது உறுதியாகி உள்ளது.

இது தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர் பவாத் சவுத்ரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “பாகிஸ்தான் மக்களின் விருப்பத்திற்கு ஆளும் அரசு மதிப்பளிக்க வேண்டும். எனவே, நாட்டில் உடனடியாக புதிய தேர்தலை நடத்த முடிவெடுக்க வேண்டும். புதிய தேர்தல் குறித்து ஆளும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் கட்சி தயாராக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இம்ரான் கான் தலைமையிலான அரசு ராஜினாமா செய்தது. அப்போது, 131 பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான் கானுடன் சேர்ந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஒருவேளை, இந்த தேர்தலில் இம்ரான் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெற்றி பெறும் பட்சத்தில், அவர் மீண்டும் அரியணை ஏற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இம்ரான் கானின் கட்சிக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டி வருகிறது. இதனை அந்த கட்சி மறுத்துள்ளது. மேலும், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க படுவதுடன், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் எந்த பதவியையும் வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu