பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம்

May 16, 2024
2024 ஆம் ஆண்டிற்கான தேசிய பெடரேஷன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று உள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய பெடரேஷன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் தனது […]

ஐபிஎல் 2024: 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

May 16, 2024
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்தது. இதனை எடுத்து பஞ்சாப் அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் […]

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு

May 16, 2024
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமீன் மனுவை விசாரித்ததில், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை அமலாக்கத்துறை இனி கைது செய்ய முடியாது. மேலும் […]

ஜூலை 10ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு ஒத்திவைப்பு

May 16, 2024
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காத நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பலமுறை அவரது ஜாமீன் மனு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு விசாரணைக்கு வந்தது. அதில் அமலாக்கத்துறை சார்பில் கால அவகாசம் […]

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது பஞ்சதந்திர கதைகள்

May 16, 2024
பஞ்சதந்திர கதைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கியுள்ளது. மங்கோலியா தலைநகர் உலான்பாதரில் பாரம்பரிய சின்னங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் யுனெஸ்கோவின் ஆசிய மற்றும் பசிபிக் உலக குழுவின் பத்தாவது கூட்டம் நடைபெற்றது. இதில் துளசிதாசர் எழுதிய ராமசரித மனாஸ், விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரக் கதைகளின் கையெழுத்து பிரதிநிதிகள் உள்ளிட்ட 20 பொருட்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்தியா சார்பில் பஞ்சதந்திர கதைகள் குறித்து விளக்கி இந்த நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டது. பின்னர் விவாதங்களுக்கு பிறகு ராம சரித மனாஸ் பஞ்சதந்திர […]

முதல்முறையாக சிஏஏ மூலம் 14 பேருக்கு இந்திய குடியுரிமை

May 16, 2024
சிஏஏ மூலம் நாட்டில் முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி குடியுரிமை சட்டம் ஆனது திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டம் இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் பாரபட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு இதனால் பாதிப்பு […]
1 2 3 29

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu