செய்திகள் -

ஸ்டார்லைனர் விண்வெளி பயணம் மே 25 க்கு ஒத்திவைப்பு

May 20, 2024
போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம், கடந்த மே 7ஆம் தேதி தனது முதல் விண்வெளி பயணத்தை தொடங்க இருந்தது. கடைசி நிமிடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டம் ரத்து செய்யப்பட்டது. பிறகு, மே 10ம் தேதி திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு, மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, மே 25 அன்று செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹீலியம் கசிவு காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில், முதல் […]

மூளையை பாதிக்கும் காலநிலை மாற்றம் - ஆய்வுத் தகவல்

May 20, 2024
அதிகரித்து வரும் காலநிலை மாற்றம், மனித மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் லான்செட் நரம்பியல் இதழில் வெளியாகி உள்ளன. காலநிலை மாற்றத்தால் மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 1968 முதல் 2023 வரை வெளியான பல்வேறு ஆவணங்களை மதிப்பாய்வு செய்து இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பநிலை உயர்வு காரணமாக மனச்சோர்வு மற்றும் கவலை ஏற்படுகிறது. பொதுவாக, பெரும்பாலான நரம்பியல் மற்றும் மூளை […]

இரவு வானை நீல வண்ணத்தில் ஒளிரச் செய்த விண்கல் நிகழ்வு

May 20, 2024
கடந்த சனிக்கிழமை இரவு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டு மக்கள் வினோதமான விண்கல் நிகழ்வைக் கண்டு களித்தனர். அன்றைய இரவு வானம் நீல வண்ணத்தில் விண்கற்களால் ஒளிர்ந்தது. வானில் இருந்து விண்கற்கள் பூமியில் விழும் பொழுது எரி நட்சத்திரங்களாக காட்சியளிக்கும். அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. ஆனால், கடந்த சனிக்கிழமை அன்று நீல நிற ஒளியோடு விண்கல் விழுந்துள்ளது. காஸ்ட்ரோ டயர் நகர் பகுதியில் இந்த விண்கல் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விண்கல் நிகழ்வை வியப்புடன் கண்ட […]

2 மாதங்களில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் - புதிய திட்டம் அறிவிப்பு

May 20, 2024
நாசா வடிவமைத்து வரும் புதிய ராக்கெட் மூலம், இரண்டே மாதங்களில் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவார்கள். இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் யாரும் அனுப்பப்படவில்லை. தற்போது இருக்கும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டு செவ்வாய் கிரகத்துக்கு ஒருமுறை சென்று வர 2 வருடங்கள் ஆகும். ஆனால், நாசாவின் பல்ஸ்ட் பிளாஸ்மா ராக்கெட் - பி பி ஆர் (PPR) மூலம் 2 மாதங்களில் சென்று வரலாம். தற்போதைய நிலவரப்படி […]

மே 19 அன்று ப்ளூ ஒரிஜின் விண்வெளி பயணம் - 6 பேர் பயணம்

May 17, 2024
வரும் மே 19ஆம் தேதி ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் 25 ஆவது விண்வெளித் திட்டமும் ஏழாவது விண்வெளி சுற்றுலா திட்டமும் நடைபெற உள்ளது இந்த முறை ஆறு பேர் விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர் அமேசான் தோற்றுநர் செஃப் பிசாசு ப்ளூ ஒரிஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் விண்வெளி சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2022 இல் விண்வெளி சுற்றுலா நடைபெற்றது அதன் பிறகு நடைபெறும் ப்ளூ ஒரிஜினின் […]

பீஷ்ம் மருத்துவமனையின் தரையிறக்க பரிசோதனை வெற்றி - இந்திய விமானப்படை

May 17, 2024
அவசர காலங்களில் மருத்துவமனை வசதி இல்லாத இடங்களில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், சிறிய மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. பீஷ்ம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் கொண்டு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 720 கிலோகிராம் எடை கொண்ட இந்த மருத்துவமனையை இந்திய விமானப்படையின் பாராசூட் மூலம் தரையிறக்கும் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவமனையின் தரையிறக்க பரிசோதனை […]
1 2 3 11

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu