செய்திகள் -

பிரிட்டனில் இந்திய மசாலா பொருட்கள் இறக்குமதிக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்

May 16, 2024
இந்திய நிறுவனங்களின் மசாலா பொருட்களில் புற்றுநோய் காரணிகள் அதிகமாக உள்ளதாக சர்வதேச அளவில் புகார் எழுந்துள்ளது. அதன்படி, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகள் இந்திய மசாலா பொருட்களை தடை செய்தன. அண்மையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இந்திய மசாலா பொருட்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது, பிரிட்டனில் இந்திய மசாலா பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த மசாலா பொருட்கள் நிறுவனங்களான எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மருந்து […]

ஈரான் சிறைவைத்த 40 மாலுமிகளை விடுவிக்க இந்தியா கோரிக்கை

May 16, 2024
40 இந்திய மாலுமிகளை விடுவிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் நாட்டிற்கு இந்தியாவின் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சார்பானந்தா சோனுவால் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி உசேன் அமீர் அப்துல்லாஹ்வினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள 40 இந்திய மாலுமிகளை விடுதலை செய்யுமாறு அமீரிடம் சார்பானந்தா வலியுறுத்தினார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகளை விடுவிக்க ஈரான் ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் […]

சொகுசு கப்பலில் சீனா செல்பவருக்கு இலவச விசா

May 16, 2024
சீனாவுக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு பின் சீனாவின் பொருளாதார மிகவும் மந்தமானது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதன் காரணமாக சீனாவின் பொருளாதாரம் மேலும் மோசமானது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சொகுசு கப்பல்கள் மூலம் சீனாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக […]

சுலோவேக்கியா பிரதமர் மீது துப்பாக்கிசூடு - உயிருக்கு ஆபத்து இல்லை

May 16, 2024
சுலோவேக்கியா பிரதமர் மர்ம நபர்களால் சுடப்பட்டார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மத்திய ஐரோப்பிய நாடு சுலோவேக்கியா. இதன் பிரதமர் ராபர்ட் பிகோ. இவருக்கு வயது 59. இவர் கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் பதவியேற்றார். அதற்கு முன்பே இரண்டு முறை பிரதமர் பதவி வகித்துள்ளார். இவர் அந்த நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம். இவர் ரஷ்ய ஆதரவாளர். அவர் நேற்று ஹன்ட்ளோவா நகரில் […]

கனடாவில் காட்டுத்தீ - 6000 பேர் வெளியேறினர்

May 16, 2024
கனடாவில் நேற்று கட்டுக்கடங்காத காட்டுத்தீ பரவியது. இதனால் சுமார் 6000 பேர் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். கனடாவின் மேற்கு மாகாணம் அல்பெர்டா. இங்கு நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது. அப்போது காற்று பலமாக வீசியதால் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் வேகமாக பரவியது. இது குறித்த தகவலை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டர்கள் மூலம் விரைந்தனர். தீயை அணைக்க போராடினர். அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வனப் பகுதியை ஒட்டி உள்ள அபசன்ட், விரேரி கிரிக், […]

சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்பு

May 16, 2024
சிங்கப்பூரின் பிரதமராக துணை பிரதமர் லாரன்ஸ் வாங் பொறுப்பேற்றுக்கொண்டார். சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 51. இவர் இதுவரை நாட்டின் துணை பிரதமராக இருந்தார். சிங்கப்பூரின் பிரதமர் லீ சியென் ஓய்வு பெற விரும்பியதையடுத்து இவர் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லீ சியென் சுமார் 20 ஆண்டுகாலம் பதவியில் இருந்தார். இந்த இரண்டு பேரும் மக்கள் செயல் கட்சியை சேர்ந்தவர்கள். இந்த கட்சி 50 ஆண்டுகளுக்கும் […]
1 2 3 28

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu