லிபியாவிலிருந்து சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து 60 பேர் பலி

March 15, 2024

லிபியாவிலிருந்து சென்ற அகதிகள் படகு மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் பலியாகினர். லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 60 பேர் உயிரிழந்தனர். லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அது நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் படகிலிருந்து 25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்ரேன் என்ற மீட்பு கப்பல் மீட்டது. இந்த விபத்தில் […]

லிபியாவிலிருந்து சென்ற அகதிகள் படகு மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் பலியாகினர்.

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 60 பேர் உயிரிழந்தனர். லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அது நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் படகிலிருந்து 25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்ரேன் என்ற மீட்பு கப்பல் மீட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என்று மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய தரைக்கடல் பகுதி மிகவும் ஆபத்தானது. இது அகதிகள் வரும் வழித்தடமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2500 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று ஐநா அகதிகள் நல ஆணையம் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu