மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் பின்லாந்து

March 20, 2024

ஐநா சபை, மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கடந்த 7 வருடங்களாக பின்லாந்து உலக அளவில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தனிநபர்களின் வாழ்க்கைத் தரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆயுட்காலம், சுதந்திரம், ஊழல், தாராள மனப்பான்மை, வாழ்க்கை திருப்தி போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்தை தொடர்ந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய […]

ஐநா சபை, மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கடந்த 7 வருடங்களாக பின்லாந்து உலக அளவில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனிநபர்களின் வாழ்க்கைத் தரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆயுட்காலம், சுதந்திரம், ஊழல், தாராள மனப்பான்மை, வாழ்க்கை திருப்தி போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்தை தொடர்ந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. ஐநா வின் ஆய்வில், பல்வேறு நாடுகளில் பழைய தலைமுறையை விட இளைய தலைமுறை மகிழ்ச்சியுடன் உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், ஐரோப்பாவை தவிர மற்ற பிராந்தியங்களில் மகிழ்ச்சிக்கான சமத்துவ தன்மை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu