உக்ரைன் ரஷ்யா போர் சமாதான முயற்சி - இருநாட்டு அதிபர்களை சந்திக்கும் ஆப்பிரிக்க தலைவர்கள்

June 16, 2023

உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், போர் நிறுத்தம் மற்றும் சமாதானம் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற துவங்கி உள்ளன. அந்த வகையில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, மற்ற ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் உடன் இணைந்து, அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார். இதற்காக, இன்று அவர் உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். அவருடன், ஜாம்பியா, செனிகல், உகாண்டா, எகிப்து, காங்கோ குடியரசு, குமாரோ தீவுகள் ஆகியவற்றை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள், […]

உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், போர் நிறுத்தம் மற்றும் சமாதானம் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற துவங்கி உள்ளன. அந்த வகையில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, மற்ற ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் உடன் இணைந்து, அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார். இதற்காக, இன்று அவர் உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். அவருடன், ஜாம்பியா, செனிகல், உகாண்டா, எகிப்து, காங்கோ குடியரசு, குமாரோ தீவுகள் ஆகியவற்றை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சென்றுள்ளனர்.

ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள், உக்ரைன் அதிபரை மட்டுமின்றி, ரஷ்ய அதிபரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, கடந்த மாதம், இருநாட்டு அதிபர்களும் தனித்தனி பேச்சு வார்த்தைக்கு இணங்கியதாக ஆப்பிரிக்க தலைவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம், போர் நிறுத்தம் சார்ந்த முக்கிய முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu