அமெரிக்காவில் H1B விசாவிற்கு இரண்டாவது முறையாக குலுக்கல்

July 29, 2023

அமெரிக்காவில் H1B விசா 2024 ஆம் நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யப்படாததால் இரண்டாவது முறையாக குலுக்கல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் மக்கள் நிரந்தர குடியுரிமை பெறாமல் வேலை செய்வதற்காக அந்த நாடு H1B விசா வழங்கி வருகிறது. ஒவ்வொரு நிதியாண்டும் இதற்கு 2.25 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் குலுக்கள் முறையில் 85,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு H1B விசா வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான […]

அமெரிக்காவில் H1B விசா 2024 ஆம் நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யப்படாததால் இரண்டாவது முறையாக குலுக்கல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் மக்கள் நிரந்தர குடியுரிமை பெறாமல் வேலை செய்வதற்காக அந்த நாடு H1B விசா வழங்கி வருகிறது. ஒவ்வொரு நிதியாண்டும் இதற்கு 2.25 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் குலுக்கள் முறையில் 85,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு H1B விசா வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான H1B விசா குலுக்கல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இது 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இரண்டாவது முறையாக குலுக்கல் நடத்த முடிவு செய்யப்பட்டு,விரைவில் நடத்தப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிvaravu சேவைகள் முகmai தெரிவித்துள்ளது. இந்த இரண்டாவது முறை குலுக்கல் பல விண்ணப்பதாரர்களுக்கும் மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர்கள் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu