அபுதாபியின் முதல் இந்து கோவில் - பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

February 15, 2024

அபுதாபியில் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்நாட்டின் முதல் இந்து கோவிலான இதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இது சுவாமி நாராயணன் கோவில் என அழைக்கப்படுகிறது. துபாய் அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் அல் முரக்கா பகுதியில் சுவாமி நாராயணன் கோவில் கட்டப்பட்டுள்ளது. அபுதாபி பட்டத்து இளவரசர் நன்கொடையாக வழங்கிய சுமார் 27 ஏக்கர் பரப்பளவில், ராஜஸ்தான் மற்றும் இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்கள் மூலம் இது […]

அபுதாபியில் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்நாட்டின் முதல் இந்து கோவிலான இதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இது சுவாமி நாராயணன் கோவில் என அழைக்கப்படுகிறது.

துபாய் அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் அல் முரக்கா பகுதியில் சுவாமி நாராயணன் கோவில் கட்டப்பட்டுள்ளது. அபுதாபி பட்டத்து இளவரசர் நன்கொடையாக வழங்கிய சுமார் 27 ஏக்கர் பரப்பளவில், ராஜஸ்தான் மற்றும் இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்கள் மூலம் இது கட்டப்பட்டுள்ளது. இந்திய சிற்பிகளால் செதுக்கப்பட்டு, அபுதாபிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஒரே நேரத்தில் 10000 பேர் தாங்கலாம் என கூறப்படுகிறது. இந்தக் கோவிலை திறந்து வைத்த பிரதமர், அங்கு நடைபெற்ற பூஜைகளிலும் நேற்று பங்கேற்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu