தயாராகிவ௫ம் மன்னர் சார்லஸ் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயங்கள்.

October 29, 2022

பிரிட்டானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முகம் பதித்த முதல் நாணயங்கள் வேல்ஸ், லான்ட்ரிசான்ட்டில் உள்ள ராயல் மின்ட்டில் அச்சிடப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரிட்டனை ஆட்சிபுரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக பொறுப்பேற்றார். அவரது புகழை பறைசாற்றும் வகையில் சின்னங்கள் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது வேல்ஸின் லான்ட்ரிசான்ட்டில் உள்ள ராயல் மின்ட்டில் மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணய […]

பிரிட்டானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முகம் பதித்த முதல் நாணயங்கள் வேல்ஸ், லான்ட்ரிசான்ட்டில் உள்ள ராயல் மின்ட்டில் அச்சிடப்பட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரிட்டனை ஆட்சிபுரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக பொறுப்பேற்றார். அவரது புகழை பறைசாற்றும் வகையில் சின்னங்கள் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது வேல்ஸின் லான்ட்ரிசான்ட்டில் உள்ள ராயல் மின்ட்டில் மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணய தொகுப்பு அச்சிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக மன்னர் மூன்றாம் சார்லஸின் 70ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாணயத்தின் மறுபக்கம், மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக அவர் 1953ம் ஆண்டு முடிசூட்டிக் கொண்ட போது பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதுவரை 9.6 மில்லியன் 50 பென்ஸ் நாணயங்கள் வரை அச்சடிக்கப்பட்ட இருப்பதாகவும் , இந்த நாணயங்கள் டிசம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவை வங்கிகள், தபால் நிலையங்கள் ஆகியவற்றின் தேவைக்கேற்ப விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த நாணயங்கள் மறைந்த எலிசபெத் மகாராணி நினைவாக பயன்பாட்டில் உள்ள 27 பில்லியன் நாணயங்களுடன் சேர்த்து புழங்கப்படும் என ௯றப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu