பிரிட்டனின் புதிய பாதுகாப்புத்துறை செயலாளராக கிராண்ட் ஷாப்ஸ் நியமனம்

August 31, 2023

பிரிட்டனின் புதிய பாதுகாப்புத்துறை செயலாளர் ஆக கிராண்ட் ஷாப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் பிரிட்டனின் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த பென் வேலஸ், அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடுத்த முறை அமைச்சரவை மாற்றம் நிகழும் போது, பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார். அதன்படி, இன்று, பென் வேலஸ் பதவி விலகி உள்ளார். அதே வேளையில், புதிய செயலாளராக கிராண்ட் ஷாப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்திற்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிட்டனின் எரிசக்தி துறையில் […]

பிரிட்டனின் புதிய பாதுகாப்புத்துறை செயலாளர் ஆக கிராண்ட் ஷாப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் பிரிட்டனின் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த பென் வேலஸ், அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடுத்த முறை அமைச்சரவை மாற்றம் நிகழும் போது, பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார். அதன்படி, இன்று, பென் வேலஸ் பதவி விலகி உள்ளார். அதே வேளையில், புதிய செயலாளராக கிராண்ட் ஷாப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனத்திற்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிட்டனின் எரிசக்தி துறையில் சிறப்பாக பணியாற்றிய கிராண்ட் ஷாப்ஸ், பாதுகாப்புத் துறையிலும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே வேளையில், பென் வேலஸ் ஆற்றிய தேசியப் பணிகளுக்கு நன்றி கூறியுள்ளார். அவரது தலைமையில் மிகவும் முக்கியம் வாய்ந்த பணிகள் சிறப்பாக நடைபெற்றதாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu