இந்தோனேசியா - ஒரே ஆண்டில் 99 குழந்தைகள் பலி- இருமல் மருந்துகளுக்கு தடை

October 20, 2022

கடந்த சில நாட்களுக்கு முன்னர், காம்பியா நாட்டில் சுமார் 66 குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததன் காரணமாக இறந்தனர். இந்நிலையில், இதே போன்ற மற்றொரு செய்தி வெளிவந்துள்ளது. தெற்காசிய நாடான இந்தோனேசியாவில் நடப்பு ஆண்டில் 99 குழந்தைகள் இறந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால், அந்த நாடு இருமல் மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. இது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியா அரசு இது தொடர்பாக அறிக்கை […]

கடந்த சில நாட்களுக்கு முன்னர், காம்பியா நாட்டில் சுமார் 66 குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததன் காரணமாக இறந்தனர். இந்நிலையில், இதே போன்ற மற்றொரு செய்தி வெளிவந்துள்ளது. தெற்காசிய நாடான இந்தோனேசியாவில் நடப்பு ஆண்டில் 99 குழந்தைகள் இறந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால், அந்த நாடு இருமல் மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது. இது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியா அரசு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இருமல் மருந்துகளால் குழந்தைகள் அதிகளவில் சிறுநீரக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மிகவும் மோசமாக பாதிப்பு அடைந்துள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை 99 குழந்தைகள் இறந்துள்ளனர். அனைவரும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது அதிர்ச்சிகரமான உண்மை. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்துகள் குறித்த விரிவான தகவல்கள் உறுதியாக கிடைக்கவில்லை. அவை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதா, இல்லை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, திரவ இருமல் மருந்துகளுக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu